ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
சீனாவின் அசிங்கங்கள்
உஷார்! பேஸ்புக் விவரங்களைத் திருடும் பாலியல் உறவுத்தளங்கள்
108 திவ்ய தேசங்கள்

- அருள்மிகு பிரகலாத வரதன் (அஹோபிலம்) திருக்கோயில், அஹோபிலம்,கர்நூல்
- அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை,மதுரை
- அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்,மதுரை
- அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி,தூத்துக்குடி
- அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம்,தூத்துக்குடி
- அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை,தூத்துக்குடி
- அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி,தூத்துக்குடி
- அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில், நத்தம்,தூத்துக்குடி
- அருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோயில், திருதொலைவிலிமங்கலம்,தூத்துக்குடி
- அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருத்தொலைவில்லி மங்கலம்,தூத்துக்குடி
- அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம்,திருச்சி
- அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர்,திருச்சி
- அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்,திருவாரூர்
- அருள்மிகு உத்தமர் திருக்கோயில், உத்தமர் கோவில்,திருச்சி
- அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில், திருவெள்ளறை,திருச்சி
- அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், அன்பில்,திருச்சி
- அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோவிலடி,தஞ்சாவூர்
- அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்,தஞ்சாவூர்
- அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ளம்பூதங்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்
- அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர்
- அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோயில்,தஞ்சாவூர்
- அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை,தஞ்சாவூர்
- அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை,திருவாரூர்
- அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி,நாகப்பட்டினம்
- அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், நாதன்கோயில்,தஞ்சாவூர்
- அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், தலச்சங்காடு,நாகப்பட்டினம்
- அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திரு இந்தளூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், காவளம்பாடி,நாகப்பட்டினம்
- அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம்
- அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், திருநாங்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், திருவண்புருசோத்தமம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்செய்கோயில்,நாகப்பட்டினம்
- அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருமணிமாடக்கோயில்,நாகப்பட்டினம்
- அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், வைகுண்ட விண்ணகரம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி,நாகப்பட்டினம்
- அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி,நாகப்பட்டினம்
- அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில், திருத்தேவனார்த்தொகை,நாகப்பட்டினம்
- அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில், திருவெள்ளக்குளம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி,நாகப்பட்டினம்
- அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர்
- அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்திபுரம்,கடலூர்
- அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர்,விழுப்புரம்
- அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல்,காஞ்சிபுரம்
- அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருநீரகம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில், நிலாதிங்கள்துண்டம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திரு ஊரகம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு சொன்வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா,காஞ்சிபுரம்
- அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருகாரகம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வானம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர்,காஞ்சிபுரம்
- அருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில், திருபவளவண்ணம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு பரமபதநாதர் திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி,காஞ்சிபுரம்
- அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர்,திருவள்ளூர்
- அருள்மிகு வீரராகவர் திருக்கோயில், திருவள்ளூர்,திருவள்ளூர்
- அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி,சென்னை
- அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை,காஞ்சிபுரம்
- அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை,காஞ்சிபுரம்
- அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்,வேலூர்
- அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம்
- அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு,பாலக்காடு
- அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம்
- அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம்
- அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்,பந்தனம் திட்டா
- அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம்
- அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், திருச்சிற்றாறு,ஆழப்புழா
- அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர்,ஆழப்புழா
- அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன் விளை,பந்தனம் திட்டா
- அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா
- அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம்,திருவனந்தபுரம்
- அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு,கன்னியாகுமரி
- அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதிசாரம்,கன்னியாகுமரி
- அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி,திருநெல்வேலி
- அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி,திருநெல்வேலி
- அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம்,தூத்துக்குடி
- அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர்,தூத்துக்குடி
- அருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர்,விருதுநகர்
- அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்,விருதுநகர்
- அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோவில்,மதுரை
- அருள்மிகு சவுமியநாராயணபெருமாள் திருக்கோயில், திருகோஷ்டியூர்,சிவகங்கை
- அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி,ராமநாதபுரம்
- அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்,புதுக்கோட்டை
- அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத்
- அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், மேல்திருப்பதி,சித்தூர்
நண்பர்கள் தேர்ந்தெடுப்பதைமரபணு தான் தீர்மானிக்கிறது

லண்டன்:தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது.மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக, மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதே போன்று, ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி, குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இளம் வயதில், எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும் இந்த மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர்தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகை உலுக்கும் போராட்டங்கள்: ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்து எழும் மக்கள்
இந்த பூமிப் பந்தின் கடந்த கால, நிகழ்கால நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே பரபரப்பும், திருப்பங்களும் நிறைந்தவை. இதில் சில நிகழ்வுகள் மட்டும் சரித்திரமாகி விடுவதுண்டு. குறிப்பாக, மக்கள் நடத்தும் மிகப்பெரிய புரட்சியும், போராட்டங்களும் சரித்திரத்தில் நிலையான இடத்தை பிடித்து விடும். அப்படிப்பட்ட நிகழ்வுகள், தற்போது பல்வேறு நாடுகளிலும் தென்பட துவங்கியுள்ளன.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல், மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது, அதை நிறைவேற்றி தர வேண்டியது ஆளும் வர்க்கத்தின் கடமை. பாதிக்கப்பட்ட மக்களின் கூக்குரலை கண்டுகொள்ளாமல், ஆடம்பர சுக வாழ்வு நடத்துவதிலேயே, ஆளும் வர்க்கத்தினர் குறியாக இருந்தால், அடக்கி வைக்கப்பட்ட மக்கள், என்றாவது ஒரு நாள் பொங்கி எழுவர். அது, மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும்; மறுமலர்ச்சி பிறக்கும். மக்களை அடக்கி வைத்திருந்த ஆட்சியாளர்கள் காணாமல் போய் விடுவர். மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து, ஊழலில் கொழுத்து இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இது தான் நிலைமை.
மீண்டும் துவங்கிய போராட்டம்: கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலும், அரசுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து, போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, இதுபோன்ற போராட்டங்கள் குறைந்திருந்தன. ஆனால், சமீபகாலமாக, உலகின் பல்வேறு நாடுகளில், ஆட்சியாளர்களின் கொடுமையை எதிர்த்து, மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடத் துவங்கி விட்டனர். வட ஆப்ரிக்காவில் உள்ள டுனீசியா, மவுரிடானியா, அல்ஜீரியா, எகிப்து, சூடான் ஆகியவற்றிலும், அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏமனிலும், மத்திய கிழக்கு நாடான ஜோர்டானிலும் இந்த போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த போராட்டங்களின் போது, ஆச்சர்யப்படும் வகையில், நம் நாட்டில் நிகழ்வதைப் போன்ற தீக்குளிப்பு சம்பவங்களும் நடக்கின்றன.
டுனீசியாவில் பிள்ளையார் சுழி: தற்போது நடக்கும் போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது டுனீசியா நாடு தான். ஒரு மாதத்துக்கும் மேலாகவே, டுனீசியாவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். வேலையின்மை, வறுமை போன்ற காரணங்களை முன்வைத்து, அதிபர் அல்-அபிதின் பின் அலி பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் 17ம் தேதி, முகமது பவுஜிஜி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டத்தை சமாளிக்க முடியாமல், அதிபர் அபிதின் பின் அலி, சவுதி அரேபியாவுக்கு ஓட்டம் பிடித்தார்.
மவுரிடானியா: மவுரிடானியா நாட்டில் பழங்குடி மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றாதது குறித்த கோபம், அவர்களிடையே, கனன்று கொண்டிருந்தது. இந்த கோபம், கடந்த மாதம் 17ம் தேதி வெளிப்பட்டது. யாகூப் என்பவர், பழங்குடியினரின் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து, பழங்குடி மக்களின் போராட்டம் அங்கு தீவிரமடைந்துள்ளது.
அல்ஜீரியா: அல்ஜீரியாவில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரித்ததன் காரணமாக, மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். கடந்த மாதம், அல்ஜீரியாவின் போராட்ட மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும், மக்கள் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களின் போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தில் பலர் இறந்தனர். இறுதியில் மக்கள் போராட்டத்துக்கு அரசு பணிந்தது. சில உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதாக அரசு அறிவித்ததை அடுத்து, பொதுமக்களின் போராட்டம் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.
சூடான்: சூடானில் பெட்ரோல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மானியத்தை அரசு ரத்து செய்ததால், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கெஜிரா மாகாணத்தில், மாணவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே, சண்டை மூண்டது. இதில் பலர் காயமடைந்தனர். இது மட்டுமல்லாது, நாட்டை வடக்கு மற்றும் தெற்கு என, இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற அந்நாட்டு மக்களின் நீண்ட கால போராட்டமும் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட பொது ஓட்டெடுப்பில், நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என, 99 சதவீத மக்கள் ஓட்டளித்துள்ளனர். இதனால், சூடானில் பதட்டம் தொடர்கிறது.
ஜோர்டான்: இங்கு சர்க்கரை, எரிபொருள், அரிசி போன்றவற்றின் விலை, கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், அதிருப்தி அடைந்த மக்கள், போராட்டத்தில் இறங்கினர். பிரதமர் சமீர் அல் ரிபாயை எதிர்த்து, தெற்கு மாகாணமான கராக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மான், இர்பிட், திபான் ஆகிய இடங்களிலும் போராட்டம் வெடித்தது.
ஏமன்: டுனீசியா அதிபர் நாட்டை விட்டு ஓடியதை தொடர்ந்து, ஏமனிலும் அதிபர், அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. டவாகுல் கர்மான் என்ற பெண், போராட்டத்துக்கு தலைமையேற்றார். மொபைல் போன்களில் அரசுக்கு எதிராக குறுந்தகவல்கள் பறந்தன. நாளுக்கு நாள் போராட்டம் வலுத்ததை அடுத்து, கடந்த மாத இறுதியில் கர்மான் கைது செய்யப்பட்டார். இவரது கைதால், போராட்டம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. அமைதியாக போராடி கொண்டிருந்த மக்கள், தற்போது வீதிக்கு வந்து போராட துவங்கி விட்டனர்.
எகிப்து: தற்போது எகிப்தில் நடக்கும் மாபெரும் மக்கள் போராட்டம், உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை, எகிப்தை நோக்கி திருப்பியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அதிபர் பதவியில் நங்கூரம் போட்டு, விடாப்பிடியாக அமர்ந்திருக்கும் ஹோஸ்னி முபாரக் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக கெய்ரோ, அலெக்சாண்டிரியா ஆகிய நகரங்களில், வரலாறு காணாத அளவுக்கு போராட்டம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், எகிப்தில் உள்ள தாரிர் சதுக்கத்தில் மூன்று லட்சம் மக்கள் திரண்டு, பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தி கொண்டிருப்பவர் எல்பரேடி. மக்களின் தொடர் போராட்டங்களால் முபாரக், சற்று இறங்கி வந்துள்ளார். "வரும் செப்டம்பர் வரையிலாவது பதவியில் இருக்கிறேன். அதற்கு பின் நடக்கும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என, கெஞ்ச துவங்கியுள்ளார். ஆனால், சுனாமி போல் எழுந்துள்ள மக்களின் கோபத்துக்கு முன், அவரது கெஞ்சல் எடுபடவில்லை. "முதலில் பதவியை விட்டு இறங்கு; அதற்கு அப்புறம் நடப்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என கொந்தளிக்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் பரவி வருவதால், ஊழல் மலிந்த, நிர்வாக திறமையற்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் பெரும் கலக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பிரெஞ்சு புரட்சி: உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு கால கட்டங்களில் இதுபோன்ற மக்கள் புரட்சி வெடித்த வரலாறு உண்டு. இதற்கு முன்னோடியாக அமைந்தது, 1789ல் நடந்த பிரெஞ்சு புரட்சி. மக்களின் நலனை புறக்கணித்து, அமெரிக்காவுக்கு ஆதவாக போரிடுவதற்கு தனது படைகளை அனுப்பி வைத்தான், மன்னன் பதினாறாம் லூயி. இதனால், பிரான்சு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். இதை பற்றி சற்றும் கவலைப்படாத மன்னன், வரியை மேலும் அதிகரித்து, மக்களின் வயிற்றெரிச்சலையும், கோபத்தையும் ஒரு சேர சம்பாதித்துக் கொண்டான். மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? இதற்கு மேலும் தாங்க முடியாது என கருதிய பிரான்சு மக்கள், பாரீஸ் நகர வீதிகளில் அலையலையாக திரண்டனர். கடல் அலை போன்ற மக்களின் அலைக்கு, அங்கிருந்த பாஸ்டைல் சிறையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் அச்சிறை தகர்க்கப்பட்டது. பிரான்சு மக்கள் செய்த, இந்த மாபெரும் புரட்சி, இதன்பின் ஐரோப்பிய நாடுகளில் பல புரட்சிகள் ஏற்படுவதற்கு முன்னோடியாக அமைந்தது.
வெள்ளி, 4 பிப்ரவரி, 2011
காதலுக்கு மரியாதை
நன்றி, கடவுளே
பரிசாய் ரூபாய் ஐநூறை
உரிய தோர் 'உறையில்'
பேரின்ப மோடு கொடுத்தான்,,
வாரி வழங்கும் உணர்வில்.
சிற்றுண்டி முடித்து வெளிவந்து
சற்றே சட்டைப்பை தொட்டபோது
உற்ற 'மொய்ப்பணம்' இங்கே..
வெற்று உறையோ அங்கே
முற்றிலும் அதிர்ச்சியில் அவன்.
மறதியில் இப்படியோர் செயல்..
பிறந்தது மனதில் புயல்.
சிறப்பு குன்றிய விதத்தை
மறவாது மாற்றும் முயற்சியில்
விறுவிறுப்பாய் உள்ளே சென்றபோது..
மணமகன் இவனை அழைத்து,
பணமோ, பொருளோ தங்களுக்கு
வேண்டாமென உரைத்து, இனிய
நண்பனது ஆசியன்பு போதுமென்றான்.
மீண்ட வெற்றுஉறையோ இவன்கையில்..
வியாழன், 3 பிப்ரவரி, 2011
உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி!

உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி!

உடலின் வெப்பம் உயர்ந்தால்…அஃது
உண்மையில் காய்ச்சலின் அறிகுறி!
உரிய மருந்துகள் உடனே அருந்தினால்
உயரும் காய்ச்சல் குறையும் – மறையும்
மானிடக் காய்ச்சலுக்கு மருந்து அருந்துவோரே!- நீங்கள்
மண்ணின் காய்ச்சலுக்கு மருந்து அளித்தீரா?
உலகின் வெப்பம் உயர்ந்து கொண்டிருப்பதை
உடனே தடுக்காவிட்டால்............
உரிய சிகிச்சை அளித்துக் காய்ச்சலின்
உயர்வை நிறுத்தா விட்டால்............
காய்ச்சலின் முடிவே
மண்ணின் முடிவாய் மாறிடக் கூடும்
மண்ணின் மரணம் மனிதக் குலத்தின்
மரணப் பிரளயம் ஆகும்!
பன்றிக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
டெங்குக் காய்ச்சல்
மலேரியா காய்ச்சல்
போன்ற காய்ச்சல் அனைத்திலும்
பொல்லாக் காய்ச்சல் புவியின் காய்ச்சல்
என்பதே உண்மை! இந்தக் காய்ச்சலைக்
குறைப்பதே உயிர்க்கும் அனைத்திற்கும் செய்யும்
நன்மை!
மண்ணின் காய்ச்சலைக் குறைத்திட
மரம் வளர்ப்பு என்னும் மருந்தளியுங்கள்! அது முதல் உதவி
மட்டுமன்று முதன்மையான உதவியுமாகும்!
மண்ணில் வளர்ந்திருக்கும் மரங்கள்! அவை
மரங்கள் அல்ல! மணமகள் பெற்ற வரங்கள்!
அந்த வரங்களை அகற்றத் தொடங்கினால்
கவசக் குண்டலம் இழந்த கர்ணனைப்
போல, ஆகும் புவியின் நிலமை!
மணப்பெண்- மண் எனும் பெண்ணின்
தோழியர் ஆகாயம், காற்று, நீர் ஆகியோர்
அந்தத் தோழியரை நாம் கலங்கப்படுத்தினால்
தாரணி நங்கை அதனைத் தாங்கிக் கொள்ளாமல்
உள்ளம் கொதிப்பாள்! வெப்பம் மிக உயர்ந்திடுவாள்!
அந்த வெப்பத்தால் பூமியின் ஆருயிர் நீங்குகின்ற
அவலமும் நேரிடலாம்!
ஓடும் பாம்பினை ஓடி நாம் அடித்தால்
ஓடிய பாம்பு உடனே திரும்பித்
தாக்கிய நம்மைச் சீறிக் கடிக்கும்!
கல்லால் நாயை அடித்தால், அந்த நாய்
பல்லால் கடிக்கப் பாய்ந்து சினந்திடும்!
அதுபோல்,
இயற்கையை, மானிடம் அறிவியல் என்னும் தன்
மூன்றாவது கையால் தாக்கத் தாக்க, பதிலுக்கு
இயற்கையும் சீறித் தன் எதிர்பைக் காட்டுதல்
இயற்கையே யாகும்!
இயற்கை சீற்றம் கொண்டு எழுந்தால்
மனித வாழ்க்கை மடங்கி, முடங்கி, உடைந்து போகும்!
இதுவரை இயற்கையைச் சீண்டிச் சீண்டிச்
சீற்றப்படுத்தியது போதும் இனியாவது
சீற்றப்படுத்தாமல் - அமைதி வழியில்
ஆற்றுப்படுத்துவோம்.
வடதுருவம்- தென்துருவம் என்னும்
இருபெரும் பாசறைகளில்
வெள்ளைக்கட்டியாய்
உறங்கிக் கொண்டிருக்கும் தண்ணீர்ப்படை வீரர்களை
புவி வெப்பப் போர்ப்பறையை முழக்கி
எழுப்பி விடாதீர்!
உறங்கும் வீரர்கள் உருகி எழுந்தால்.......
அந்தப்படையின் ஆக்கிரமிப்பு
எதுவரை நடக்குமோ- என்னென்ன நடக்குமோ?
நாம் வாழும் பூமி பந்தின்
முக்கால் பகுதி
தண்ணீர்ப்படை வீரர் தம் ஆக்கிரமிப்பில்
தானே உள்ளது?
மேலும் அவர்கள் சீறி எழுந்தால்
மானிடர் நாம் வாழும்
கால்பகுதியிலும் கால் ஊன்றிவிடுவார்கள் !
என்பதால் எச்சரிக்கின்றேன்!
பஞ்சுப் பொதிகளாய்- வெண்ணைக் கட்டியாய்
ஆழ்ந்து உறங்கும்,
நீர் வீரர்களை, மானிடரே! நீர் எழுப்பி விடாதீர்!
அவர்கள் உறங்கும் வரையில் தான், கடல் மட்டமும் எல்லைக்கோடும்
மாறாதிருக்கும்
எல்லைப்போரில் அவர்கள் ஈடுபடாது உறங்க
இயற்கை வாழ்வு எனும் தாலாட்டை மானிட இனம்
உரங்க இசைப்பது ஒரு வழி! அஃது ஒரே வழி!
எதனை நிறுத்தினாலும் இயற்கை வாழ்வுத் தாலாட்டை மட்டும்
நிறுத்தாமல் பாடத் தொடங்குங்கள்- பாடிக் கொண்டே இருங்கள்- அது தான்
மானிடத்தை மகிழ்வுடன் பொங்கச் செய்யும்!
இயற்கைச் சீற்றத்தை மங்கச் செய்யும்!




